ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Friday, 24 January 2014

Today's Song - ஆவி உடல் பொருள் அத்தனையும்


கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால்
அவரைப் பாடுவேன் - சங்கீதம் 13:6

இப்பாடலை டவுன்லோடு செய்ய
பட்டனை கிளிக் செய்யவும்


ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே
பாவி என்னை மீட்க பரலோகத்தை விட்டு
பாரினில் வந்து மா பாடுகள் பட்டதால்
ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

பாவத்தை தண்ணீர் போல் பருகி வந்தேன்
கோபத்திற்காளாய் கெட்டழிந்தேன்
சாபத்திற்காளாய் சஞ்சரித்தேன்
என் சாபத்தை ஏற்றுக்கொண்டீரே என் நாதா

ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

பங்க குருசில் படுத்தீர் அன்றோ
தங்க திருமேனி தவித்ததன்றோ
தாங்கொண்ணா வேதனை சகித்தீரன்றோ
எங்குதியன் ஆவி ஆப்பாடு நினைக்கையில்

ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

பிள்ளையை போல் என்னை தாழ்த்துகிறேன்
கள்ளமெல்லாமுமே தள்ளுகிறேன்
உள்ளத்தை உம்முன்னே ஊற்றுகிறேன்
தள்ளாதென்னை ஏற்றுக் கொள்ளுமே என் நாதா

ஆவி உடல் பொருள் அத்தனையும்
உமக்காக படைக்கிறேன் ஆண்டவரே

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21