ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

இயேசு யார்?

நம் கண்களைத் திறக்க வந்தவர்...


இயேசு ஒரு முறை பிறவிக் குருடன் ஒருவனைச் சந்தித்தார். அப்பொழுது, அவன் மேல் பரிதாபங் கொண்டு, உமிழ்நீரினால் சேற்றை உண்டுபண்ணி, அதை அவன் கண்களில் பூசி "நீ போய் சீலோவோம் குளத்திலே கழுவு" என்றார். அவரை விசுவாசித்து, அவனும் அக்குளத்திற்கு சென்றான். தன் கண்களைக் கழுவி பார்வை அடைந்தவனாய் திரும்பி வந்தான். அவன் கண்கள் திறக்கப்பட்டதைக் கண்டு அப்பகுதி மக்கள் ,வியந்தனர். அவன் கண்களைத் திறந்தவர் யார் என்று விடாமல் கேட்டார்கள். அப்போது, அவர்களிடம் அவன் சொன்னான்,

"நான் குருடனாய் இருந்தேன், இப்பொழுது காண்கிறேன், இது ஒன்று தான் எனக்கு தெரியும்" - யோவான் 9:25

இதனைக் கேட்டவர்கள் யூதர்களாய் இருந்தார்கள். அந்த மனிதன் அவரை மகிமைப்படுத்துகிறான் என அவர்கள் கண்டு அவனை புறம்பே தள்ளினார்கள். அந்நேரம் இயேசு அங்கு வந்தார், அவன் புறந்தள்ளப்பட்டதை அறிந்து, "நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?" என்றார். அதற்கு அவன், "ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார்?" என்றான். இயேசு அவனை நோக்கி, "நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான்" என்றார். உடனே அவன், "ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டான். அந்த நாள் அவனுக்கு இரட்சிப்பு வந்தது...

ஆனால் இன்று இயேசு நம்மிடம் வந்திருக்கிறார். நம் கண்களைத் திறக்க வந்தவரை நாம் அறிந்து கொள்ள வேண்டிய நாள் இது. இந்த உலகத்தின் ஒளியாய் அவர் வந்தார். எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி அவர். நம்மிடத்தில் வந்த ஒளியை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், மெய்யான சந்தோஷத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு நமக்கீந்த இரட்சிப்பை இலவசமாய் ஏற்றுக் கொண்டு நித்திய வாழ்வை அடைய வேண்டும். இதுவே எங்கள் விருப்பம், வேறெந்த நோக்கமும் இல்லை. நம்மை படைத்த பரிசுத்தரை அறிந்து கொள்ள இங்கு சில பதிவுகள் திரட்டி வைக்கப்பட்டுள்ளது. பாவத்தில் இருந்து அவர் நமக்களித்த மீட்பையும், சத்திய வார்த்தைகளையும், நித்திய ஜீவனையும், அவரோடு நமக்குள்ள உறவையும் அறிந்து கொள்ளுங்கள்.

இயேசு யார்?
இயேசு கிறிஸ்துவை பற்றி ஒரு சிறு அறிமுகம்...



இயேசு கிறிஸ்து கடவுளா?
இயேசு தன்னைக் குறித்து என்ன சொன்னார்?



திரியேகம் என்றால் என்ன?
திரியேகம் பற்றிய ஓர் எளிய விளக்கம்...




பரிசுத்த வேதாகமம் உண்மையா?
பரிசுத்த ஆவியானவர் அருளிய சத்திய வார்த்தை...


சிலுவை பலி எதற்கு?
நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு எப்படி புதிதானது?
நம் பாவசாபங்கள் எவ்வாறு ஒழிந்தன?


என் பாவம் மன்னிக்கப்படுமா?
இயேசுவால் மீட்கப்பட்டவன் தன் நண்பனுக்கு சொல்வதென்ன?



என் வாழ்வின் பொருள் என்ன?
நமக்குள்ள பங்கை அறியும் போது, நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது...

 பாவம் என்றால் என்ன‌?
 பாவங்களாக வேதம் கூறுகின்ற செயல்கள் என்னென்ன?




நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு!
நீங்கள் அடிமையின் ஆவியை பெறவில்லை, "அப்பா பிதாவே" என்றழைக்க செய்யும் புத்திர சுவிகார ஆவியை பெற்றீர்கள்...!

என் வாழ்வில் துன்பங்கள் ஏன்?
நம் வாழ்வு நமக்கு வைக்கப்பட்ட தேர்வு...



(தொடரும்...)

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21