ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Friday, 17 January 2014

புனித பூமி இஸ்ரேல் - சில புகைப்படங்கள்

பைபிள் கூறுகின்ற சில புனித இடங்களின் புகைப்படங்கள் இப்பதிவில் உள்ளன. பதிவு விரைவாக லோடாக படங்கள் சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.

1. இந்த இடத்தில் தான் இறைவன் ஏழ்மையின் கோலமெடுத்து மனிதனாக‌ பிறந்தார். மரியாளின் மடியில் குழந்தையாக இயேசு உதித்த இடம்.


2. இயேசு கிறிஸ்து, பெற்றோர் அரவணைப்பில் வளர்ந்த நாசரேத்து ஊர், தன் முப்பதாம் வயது வரை நாசேரத்தில் ஒரு ஏழை தட்சனாக இயேசு வாழ்ந்து வந்தார்.


3. நாசரேத்தூரில் உள்ள ஒரு யூத ஆலயம், இயேசு கிறிஸ்துவின் காலத்திலும் இதே போல தான் அங்கு ஆலயங்கள் கட்டப்பட்டிருந்தன.


4. யோர்தான் நதிக்கு நீர்வரத்து கொடுக்கும் ஊற்றுகளில் ஒன்றிது, இதன் கரைகளில் இயேசு தன் சீஷர்களோடு போதித்து வந்தார். அவர் கால் பதிந்த புனித‌ இடம்.


5. இதன் பெயர் பாறை குவிமாடம், ஆங்கிலத்தில் டோம் ஆஃப் ராக் என்பார்கள். இங்கு தான் ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முற்பட்டார்.


6. இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறை பூமி இது, அழகிய பூந்தோட்டமாக தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.


7. இந்த கல்லறையில் தான் இயேசு வைக்கப்பட்டிருந்தார்.


8. கல்லறைக்குள்ளாக செல்லும் நுழைவு வாயில், "அவர் இங்கே இல்லை, அவர் உயிர்தெழுந்தார்" என்ற பைபிள் வசனத்தை கதவில் பதித்துள்ளனர்.


9. கல்லறையின் உட்புறம்.


10. கல்லறைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஒரு வட்டக் கல், இது போன்ற கற்களைக் கொண்டே அக்காலத்தில் கல்லறைகளை மூடி வைப்பார்கள்.


11. எருசலேம் நகரின் கிழக்கு வாசல், இந்த வாசல் வழியாகத் தான் இயேசு கழுதையில் அமர்ந்து பவனியாக எருசலேமிற்குள் சென்றார், தற்போது அடைக்கப்பட்டுள்ளது.



12. எருசலேம் நகரத்தின் தோற்றம்.


13. நாசேரத்து மக்களுக்கு நீர்கொடுக்கும் பழங்கால கிணறு. இங்கு தண்ணீர் மொண்டு செல்ல மரியாள் வந்தார். அப்போது, கபிரியேல் தூதன் அவருக்கு காட்சியளித்து இயேசுவின் பிறப்பைக் குறித்து அறிவித்தான்.


14. ஒலிவ மலை, இவ்விடத்தில் இயேசு உலாவினார், இரண்டாம் வருகையின் போது, அவரது பாதங்கள் இம்மலையின் மீது மீண்டும் பதியும்.


15. கலிலேயா கடல், பாறைமேல் நடப்பது போல இக்கடல் நீரின் மேல் இயேசு நடந்தார், தன் சீஷர்களோடு பலமுறை அவர் பயணித்த கடல் இது.


16. இயேசு நாற்பது நாள் உபவாசமிருந்த யூதேயா வனாந்திரம்.



17. பிசாசு இயேசு கிறிஸ்துவை சோதிக்க கொண்டு சென்ற மலை.


18. இயேசு மறுரூபமாகிய மலை உச்சி. இங்கு தான் மோசே, எலியா இறங்கி இயேசு கிறிஸ்துவோடு சீஷர்களுக்கு தென்பட்டனர்.



19. பிசாசு கிறிஸ்துவை சோதிக்க கொண்டு சென்று நிறுத்திய உப்பரிகை.



20. இயேசுவால் துறத்தப்பட்ட பிசாசுகள் பன்றிக்கூட்டத்தில் புகுந்து, அவை கடலில் பாய்ந்து மாய்ந்த இடம்.



21. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்ற யோர்தான் நதி.



22. இவ்விடத்தில் இயேசு தன் சீஷர்களோடு கடைசி பந்தி இருந்தார், அவர்களின் கால்களை கழுவினார், அப்பத்தைப் பிட்டு, திராட்சை ரசத்தை பருகக் கொடுத்தார். இதே அறையில் தான் உயிர்த்தெழுந்த இயேசு, சீஷர்களுக்கு காட்சியும் கொடுத்தார். அவர் விண்ணேறிய‌ பிறகு, மத்தியா அப்போஸ்தலனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆவியானவர் திருச்சபைக்கு அருளப்பட்ட‌ இடமும் இதுவே.



23. இயேசு பரலோகத்திற்கு எழும்பி சென்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கோபுரம்.


24. இயேசு கிறிஸ்துவை பிரசங்கித்த ஸ்தேவான் கொல்லப்பட்ட இடம். இவ்விடத்தில் கல்லெறியப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார். எனவே, ஸ்தேவான் வாசல் என இவ்வாயிலை அழைக்கின்றனர்.



25. புலம்பலின் சுவர், யூதருக்கு மீந்துள்ள ஒரே மதிற்சுவர். "மேசியாவே வாரும், மேசியாவே வாரும்" என பல யூதர்கள் இச்சுவரில் தலையை மோதிக் கொண்டு கர்த்தரை நோக்கி பிராத்திக்கின்றனர். இயேசு தான் மெய்யான மேசியா என்கிற உண்மையை இவர்கள் அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட ஜெபம் செய்வோம்.



இன்னொரு பதிவில் இன்னும் சில புகைப்படங்களை காணலாம்.

4 comments:

  1. neenga liva photo eduthingla?

    ReplyDelete
  2. இல்லை சகோ... இது ஒரு தேவ ஊழியரால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட படங்கள்... அவர் அனுமதித்ததன் பேரில் இங்கு பதியப்பட்டுள்ளன.

    ReplyDelete

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21