அன்புக்கு நிகரற்ற தேவன் தான் நம் இயேசு. இயேசு கிறிஸ்தவர்களுக்கு உரியவர் என்று சொல்வதை விட இந்த உலகமக்கள் எல்லாருக்கும் உரியவர் என்று கூறினால் சரியாய் இருக்கும்.
மெய்யான பரிசுத்தமுள்ள தெய்வம் ஒருவர் உண்டு. அவருடைய மனித அவதாரமாக இயேசு இவ்வுலகில் மலர்ந்தார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீன நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில், ஏழ்மையின் கோலத்தில் அதிசயப் பாலனாக இயேசு பிறந்தார். ஏரோது என்பவன் அரசனாக இருந்த நாட்களில் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேம் என்னும் சின்ன கிராமத்தில் இயேசு பிறந்தார். கன்னி மரியாளின் கர்ப்பத்தில் பிறந்த அவருடைய அதிசய பிறப்பு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்க்கதரிசன கூற்றுகள் எல்லாம் அந்தந்த காலத்தில் அவரது வாழ்வில் அப்படியே நிறைவேறின.

இயேசு என்கிற பெயருக்கு "அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு விடுதலையையும், மீட்பையும் அருள்வார்" என்று பொருள். பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனுக்குலத்தை மீட்டு எடுக்க இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். மனிதனை பாவத்தில் இருந்து விடுதலையாக்கவே அவர் மனித அவதாரம் எடுத்து வந்தார். இயேசுவே அன்பின் அவதாரம், அவரே இறைவனின் ஒரே அவதாரம், ஒப்பற்ற அவதாரம்...
'இயேசு' பிறந்தபோது அவருடைய அற்புத பிறப்பை பற்றி நல்ல செய்தியை தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தனர். பாலஸ்தீனத்திற்கு கிழக்கே இருந்து ஞானிகள் ஒரு அற்புத நட்சிரத்தால் வழிநடத்தப்பட்டு, பெத்தலையில் பிறந்த பரிசுத்த பாலகனை பணிந்து கொள்ள வந்தனர்.
கர்த்தராகிய இயேசுவின் வருகையை பற்றிய செய்தியை உங்களுக்கு அறிவித்து இந்த மகிழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலக சரித்திரத்தை 'கிறிஸ்துவுக்கு முன்', 'கிறிஸ்துவுக்கு பின்' என்று இரண்டாகப் பிரித்தது, மனோத்தத்துவ ஞானத்தில் மூழ்கிகிடந்த கிரேக்க ஞானத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. படைபலத்தால் இறுமாப்பு அடைந்திருந்த ரோமப் பேரரசின் அடிப்படையையே ஆட்டி அசைத்தது. சம்பிரதாயத்திலும், சன்மார்க்கத்திலும் வேரூன்றி நின்ற யூத சடங்காச்சாரங்களுக்கு மாபெரும் முற்றுப் புள்ளியை வைத்தது.
இயேசு கிறிஸ்து உலக மக்களுக்கு 'இறை வாழ்வை' ஒரு புதிய வாழ்வை கொண்டு வந்ததே அதற்கு காரணம். பாவத் தன்மையிலும், வியாதியிலும், மரண பயத்திலும், சாபத்திலும், அறியாமையிலும், மூழ்கி கிடந்த மனிதருக்கு மறுமைக்குரிய அருள் நிறைந்த ஒரு புதிய வாழ்வை அவர் எடுத்து வந்தார்.
தன் பிறப்பிலும், வாழ்க்கையிலும் அதிசயமானவராக விளங்கினார். பேச்சிலும், பிரசங்கத்திலும், போதனையிலும் இறைவனின் அதிகாரத்தை வெளிப்படுத்தினார். அவர் செய்த அற்புத செயல்களிலும், நற்தொண்டுகளிலும் தெய்வத்தின் ஆற்றலையும் அன்பையும் மனிதனுக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். இயேசு கிறிஸ்து ஒரு மகாத்மாவாக பணியாற்றி புகழைப் பெற இவ்வுலகில் பிறக்கவில்லை. 'சாகப் பிறந்த இயேசு' என்று கூறினால் அது மிகையாகும். 'சாக பிறந்தாரா?' என வியப்புடன் நீங்கள் கேட்கலாம். ஆம், பாவத்திற்கான பிராயசித்த பலியாக பரமன் இயேசு மரிக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் உத்தமனாகவே நியாயந்தீர்க்கப்பட்டார். இயேசுவின் மரணத்தோடு அவரது வாழ்க்கை முடியவில்லை. மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்தவராக நம் தேவன் உயிர்த்தெழுந்தார். பலருக்கும் தரிசனம் கொடுத்த ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு பரமேறிச் சென்றார்.
'கடவுள் கடவுளாகவே இருக்கட்டும், நான் நானாகவே இருக்கிறேன்' என்பது அநேக மக்களது எண்ணம். அதாவது அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு உள்ளான, உண்மையான, உறுதியான உறவு கிடையாது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் தங்கள் குணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறார்கள். கெட்ட பழக்கங்களில் இருந்து விடுதலையில்லாமல் துடிக்கிறார்கள். வாழ்க்கையில் அழகும், ஆனந்தமும், ஆசீர்வாதமும் பெற்று அனுபவியாமல் திசைகெட்டு அலைகிறார்கள். தெய்வமே தன்னைத் தாழ்த்தி, உலகத்தில் எந்த மனிதனும் அவருடைய அன்பையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இவ்வுலகில் பிறந்தார்.
இயேசு உலகத்தில் பிறந்தது பாவிகளை தண்டித்து அழிப்பதற்காக அல்ல. தாழ்ந்தவர்களை சீர்தூக்கவும், அன்பினால் நிரப்பவும், பரிசுத்தப் படுத்தவுமே இயேசு மனிதராக பிறந்தார். உங்களை நேசிக்கிற இயேசு கிறிஸ்து உங்களுக்காக இந்த உலகத்திற்கு மனிதனாக வந்தார், உங்கள் பாவங்களுக்காக, உங்களுக்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார். இன்றைக்கும் ஆண்டவராகிய இயேசு உயிருடன் இருக்கிறார். நினைவில் கொள்ளுங்கள், அவர் உங்களை அளவில்லாமல் நேசிக்கிறார், நீங்கள் வெறுத்து தள்ளினாலும், அவர் உங்களை நேசிப்பார், உங்களுக்காக கரம்விரித்து காத்திருப்பார். ஏனெனில் நம் தேவன் அன்பின் உருவானவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது அவர் உங்கள் உள்ளத்தில் பிறக்கிறார். இயேசுவின் பிறப்பும், வாழ்க்கையும் உலக சரித்திரத்தை இரண்டாகப் பிரித்தது போல இயேசு உங்கள் உள்ளத்தில் வந்து தங்கும் போது உங்கள் வாழ்க்கை மறுமலர்ச்சியைப் பெறும், உங்கள் வியாதியும் பிரட்சனையும் கடந்துபோகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்து அவரை ஏற்றுக்கொள்வீர்களா?
மனிதனுடைய சரீரம் அசுத்த பழக்க வழக்கங்களில் மூழ்கி அழிய பிசாசினால் உருவாக்கப்பட்டதல்ல. மிருகத் தன்மையை வெளிப்படுத்த மிருகத்திலிருந்து தோன்றியது அல்ல. 'மனித சரீரம் தெய்வத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என்றும் இறைவன் தங்கும் ஆலயம்' என்றும் பைபிள் போதிக்கிறது. தேவனுடைய பிரசன்னமும் பரிசுத்தமும் மனித உள்ளத்தை ஆட்கொண்டு அவருடைய அன்பும் ஆற்றலும் யாவருக்கும் வெளிப்பட வேண்டும் என்பதே இறைவனுடைய திருவுள விருப்பம் ஆகும். கடவுளுடைய இந்தத் திட்டம் மனிதனுடைய வாழ்வில் இடம்பெறும் வரை மனிதனுக்கு நிலையான அமைதியும் நிறைவான மகிழ்ச்சியும் கிடைப்பது இல்லை. இந்த கிருபையை இலவசமாக கொடுக்கவே இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்.
ஆண்டவராகிய இயேசுவிற்கு உங்கள் உள்ளத்தில் இடமளியுங்கள். அவரை உண்மையுடன் நம்பினவர்கள். அவரால் சந்திக்கப்பட்டவர்கள் புதிய மனிதர்களாக மாறினார்கள். இன்றும் ஆண்டவராகிய இயேசுவை விசுவாசித்து, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறவர்கள் உள்ளத்தில் உலகத்திற்கு ஒளியாக வந்த இயேசுவின் ஜீவஜோதி பிராகசிக்கிறது.
இயேசு உங்களுக்காகவே. அவர் உங்கள் வாழ்வை நிறைவாக்க வல்ல தேவன். சுகவீனம் அடைந்த மக்களை குணமாக்கி, மரித்தோரை உயிர்பித்து, பாவிகளை மன்னித்து புதுவாழ்வு அளித்த அன்புத் தெய்வம் இயேசுவுக்கு உங்கள் மனதில் இடம் தாருங்கள். அதுவே நீங்கள் கொண்டாடக் கூடிய நன்னாள். இது ஏதோ ஆடம்பரமான வெளிவேசமல்ல, மதமாற்றமல்ல, உள்ளான மனமாற்றமும், குணமாற்றமும் ஆகும். உள்ளத்தால் நிறைந்த மெய்யான மனமாற்றமே எப்பொழுதும் நமக்கு இன்றியமையாதது. இந்த மகிழ்ச்சியை அனுபவித்தவர்களால் அதை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. எனவே தான் உங்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கிறோம். முதல் முறையாக மனித வர்க்கத்திற்கு மீட்பை அருள வந்த இயேசு கிறிஸ்து மிக விரைவில் நீதியுள்ள நியாயந்தீர்ப்பைக் கொடுக்க இந்த உலகத்திற்கு மீண்டும் வரப்போகிறார். அவரை நீதியுள்ளவர்களாய் சந்திக்க நாம் யாவரும் ஆயத்தப்படுவோம். உங்களுக்கு எங்கள் உள்ளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...

No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21