ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Saturday, 4 January 2014

உங்கள் துன்பத்தை இந்த பாடல் துடைத்துப் போடும்...

இயேசு நம்மை எந்த சூழ்நிலையிலும் அன்போடு அரவணைத்து தேற்றுபவர். மனதை வாட்டி எடுக்கின்ற துன்பமா? சொல்ல முடியாத துயரமா? கவலைப்பட வேண்டாம். உங்களுக்காகவே ஒருவர் இருக்கிறார். அவர் தாம் நம் இயேசு. தடுமாறும் நேரமெல்லாம் நாம் செய்ய வேண்டியது அவரது பாதப்படியில் அமர்ந்து இளைப்பாறுதல் பெறுதல் தான். இந்த பாடலை தரவிறக்கம் செய்து கேளுங்க. உங்கள் இன்னல், துன்பம், கவலை, கண்ணீர் எல்லாம் பறந்தோடும்....



பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலைகலங்கி ஆழ்த்தையில்
அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலைகலங்கி ஆழ்த்தையில்
அலைகடல் தடுத்து
நடுவழி விடுத்து
அலைகடல் தடுத்து
நடுவழி விடுத்து
க‌டத்தியே சென்ற கர்த்தனை
க‌டத்தியே சென்ற கர்த்தனை

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்
என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்
மாராவின் கசப்பை
மதுரமுமாக்கி
மாராவின் கசப்பை
மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே
மகிழ்வித்த மகிபனையே

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

ஒன்றுமில்லாத வெறுமை நிலையில்
உதவுவார் அற்று போகையில்
ஒன்றுமில்லாத வெறுமை நிலையில்
உதவுவார் அற்று போகையில்
கன்மலை பிளந்து
தண்ணீரை சுரந்து
கன்மலை பிளந்து
தண்ணீரை சுரந்து
தாகம் தீர்த்த தயவை
தாகம் தீர்த்த தயவை

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால்
ஞானமாய் போஷித்த‌
வான மன்னாவால்
ஞானமாய் போஷித்த‌
காணாத மன்னா இயேசுவை
காணாத மன்னா இயேசுவை

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21