அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
உந்தன் பார்வை பட்டால் போதுமே
என்னில் பாவப் பிசாசுகள் ஓடுமே
உந்தன் பாதம் தொட்டால் போதுமே
எந்தன் பாரங்கள் யாவும் தீருமே
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
வேதம் நிறைவேற வந்தாய்
என்னில் பேதங்கள் நீங்கிய வாழ்வினை தந்தாய்
சாபங்கள் தொலைத்திட வந்தாய்
மண்ணின் தாபங்கள் தீர்த்திட வந்தாய்
சாபங்கள் தொலைத்திட வந்தாய்
மண்ணின் தாபங்கள் தீர்த்திட வந்தாய்
கண்மணியே கனி அமுதே எந்நாளுமே
விண்ணரசே பொன் முரசே வந்தாளுமே
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
சிலுவை பலியாக வந்தாய்
நாங்கள் சிலுவையை சுமக்க உதவிட வந்தாய்
சிலுவையால் புதுவாழ்வு தந்தாய்
என்றும் சிலுவையே ஜீவன் என்றாய்
சிலுவையால் புதுவாழ்வு தந்தாய்
என்றும் சிலுவையே ஜீவன் என்றாய்
கண்மணியே கனி அமுதே எந்நாளுமே
விண்ணரசே பொன் முரசே வந்தாளுமே
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
ஏழைகட்காகவே வந்தாய்
என்றும் பேழையின் வாழ்வினை எமக்கும் தந்தாய்
பாழான எமக்காக வந்தாய்
மண்ணில் தாழ்ந்தோர்க்கு உயர்வாழ்வு தந்தாய்
பாழான எமக்காக வந்தாய்
மண்ணில் தாழ்ந்தோர்க்கு உயர்வாழ்வு தந்தாய்
கண்மணியே கனி அமுதே எந்நாளுமே
விண்ணரசே பொன் முரசே வந்தாளுமே
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
உந்தன் பார்வை பட்டால் போதுமே
என்னில் பாவப் பிசாசுகள் ஓடுமே
உந்தன் பாதம் தொட்டால் போதுமே
எந்தன் பாரங்கள் யாவும் தீருமே
அன்பே என்னை மீட்டிட இவ்வுலகில் வந்தாய்
இன்றே உன்னை தொழுதிட ஓடோடி வந்தேன்
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21