ஏப்ரல் 2014 வாக்குத்தத்தம் - கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் - எரேமியா 17:7

Thursday, 16 January 2014

இயேசுவின் அன்பு அளவிட முடியாதது - பாடல்

1 யோவான் 4:7-12 - பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாய் இருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்பு கூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூரக் கடனாளிகளாய் இருக்கிறோம். தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.


அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
அளவிடமுடியாது

பாவம் பெருகின இடத்தில்
தேவ கிருபை வெளிப்பட்டதே
மீறுதல் போக்க சிலுவையிலே
இரத்த வெள்ளம் பாய்ந்திடுதே

பாவம் பெருகின இடத்தில்
தேவ கிருபை வெளிப்பட்டதே
மீறுதல் போக்க சிலுவையிலே
இரத்த வெள்ளம் பாய்ந்திடுதே

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

சிலுவை நாயகன் சிந்திய‌
இரத்தம் அன்பாய் வழிகின்றது
சிறுமைபட்ட ஜனங்களை மீட்க‌
இரத்தம் போக்கின்றது

சிலுவை நாயகன் சிந்திய‌
இரத்தம் அன்பாய் வழிகின்றது
சிறுமைபட்ட ஜனங்களை மீட்க‌
இரத்தம் போக்கின்றது

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

ஆணிகள் அடித்து தொங்கிய போதும்
தனக்காய் அழவில்லை
ஆணிகள் அடித்து தொங்கிய போதும்
தனக்காய் அழவில்லை
கள்ளர்கள் நடுவில் தொங்கிய போதும்
உனக்காய் அழுகின்றார்

இயேசு உனக்காய் அழுகின்றார்
இயேசு உனக்காய் அழுகின்றார்

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்புக்கு ஈடேது?

அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிடமுடியாது
அளவிடமுடியாது...

No comments:

Post a Comment

"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21