முழு நிச்சயமாய் நாங்கள் விசுவாசிக்கிற சில சத்தியங்கள்:
1) கண்களால் காணப்படுக்கிறவைகள் காணப்படாதவைகள் எல்லாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை. தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என திரியேகராய் இருக்கிறார். அவருடைய செயல்கள் எல்லாம் நேர்த்தியானவை.
2) இயேசு கிறிஸ்துவே தேவ குமாரன். அவர் கன்னியிடத்தில் பிறந்து, முற்றிலும் பரிசுத்தமான வாழ்வை நடத்தினார். நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே இரட்சிப்பைப் பெறுகிறோம்.
3) உற்பவித்தது முதலே எல்லா மனிதர்களும் பாவிகளாயிருக்கின்றனர், எனவே நித்திய ஜீவனைப் பெற, அவர்கள் மனந்திரும்பி, கிறிஸ்துவுக்குள்ளாய் புதிதாய் பிறந்து, இறுதி வரை தங்களை தேவனுக்கென்று ஒப்புக் கொடுக்க வேண்டும்.
4) எல்லா மனிதர்களும் தேவனை அழைக்க பாத்திரராய் இருக்கின்றனர், அவர்களது அழைப்பு உண்மையோடு, முழு இருதயத்தோடு ஏறெடுக்கப்பட்டிருந்தால், தேவன் அவர்களுக்கு கிருபையளித்து புதிதாக்குவார், மறுரூபமாக்குவார், இறுதிவரை தன்னுடன் நிலைத்திருக்க தயை செய்வார்.
5) தேவன் அளவிடமுடியாத வல்லமையும் மனிதவர்கத்தைவிட மெய் ஞானமும் உள்ளவர். எனவே அவரது வார்த்தைகளே மனிதர்களுக்கான சரியான வழிகாட்டுதல்.
6) பரிசுத்த வேதாகமமே தன்னுடைய சித்தத்தையும், மனுகுலத்துக்கான திட்டத்தையும் அறிவிக்க தேவன் அருளின வார்த்தை. அதன் 66 நூல்களையும் பரிசுத்த ஆவியானவர் அருளினார்.
7) தேவனை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் நேசிக்க வேண்டும். தன்னைப் போல தனக்கடுத்தவர் மேல் அன்பு செலுத்த வேண்டும். இதுவே மனிதர்கள் படைக்கபட்ட நோக்கம்.
8) மரணமானது தேவனுக்கென்று தங்களை முழு இருதயத்தோடு அர்ப்பணித்தவர்க்கு நித்திய சந்தோஷத்தையும், பாவத்தில் நிலைத்தவர்க்கு நித்திய ஆக்கினையையும் கொண்டு வரும்.
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21