"உத்தமும் உண்மையுள்ள ஊழியக்காரனே,
உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி"
(மத்தேயு 25:21)
உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி"
(மத்தேயு 25:21)
கர்த்தருக்கு உண்மையாக இருந்து, தனது நாட்டு மக்களைக் கர்த்தரிடம் திருப்புவதற்குத் தன்னாலான யாவற்றையும் செய்த அரசர் யோசியா.
- (படிக்கவும்: 2 இராஜாக்கள் 22:1-20)
எட்டு வயதில் அரசரான யோசியா, கர்த்தரை நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்த சிறப்பான மனிதர். சிறுவயதில் இருந்து கர்த்தரைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்த அவர், பெரியவன் ஆனதும் திட்டமிட்டுக் கர்த்தருக்கென்று பல நல்ல செயல்களைச் செய்தார். கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்த ஒரே அரசர் யோசியா தான். கர்த்தருடைய நியாப்பிரமாணத்தை வாசிக்கக் கேட்டவுடன், தனது நாட்டின் பாவங்களையும் தனது தவறையும் அறிந்து கொண்டு மிகுந்த வருத்தமடைந்தார் யோசியா. முழு மனதோடு ஜெபித்தார், தீர்க்கதரிசியிடம் ஆள் அனுப்பி விசாரித்தார். அதோடு நிற்காமல், கர்த்தருடைய வார்த்தைக்கேற்ப அநேக மாறுதல்களை நாட்டில் ஏற்படுத்தினார்.
கர்த்தருடைய வசனத்தை கேட்டவுடன், அதற்காக மனம் வருந்தி ஜெபித்தது மட்டுமன்றி வேத வார்த்தைப்படி செயல்பட்டார். மக்களைக் கூடிவரச் செய்து அவர்களுக்கு கர்த்தருடைய வசனங்களை அறிவித்து கர்த்தருடன் உடன்படிக்கை செய்ய வைத்தார். பின்பு தன் நாட்டிலும், அண்டை நாடான இஸ்ரவேலிலும் இருந்த மேடைகளையும், சிலைகளையும் அகற்றி, பாவப் பழக்கங்களை அழிக்க முயற்சி எடுத்தார். கர்த்தருடைய வசனத்தின்படி தான் நடந்து கொண்டதுடன், தனது நாட்டு மக்களையும் அவ்வாறு வழி நடத்தினார். தனக்கு பின்பும் அவர்கள் ஒழுங்காயிருக்க, யாவரையும் கர்த்தருடன் உடன்படிக்கை பண்ணும்படி செய்தார். கர்த்தரிடம் தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், தன் முழு பெலத்தோடும் நியாப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதை சாய்த்தார். யோசியாவைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதும் இல்லை (2 இராஜாக்கள் 23:25).
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்றபடி பொறுப்புகளையும், திறமைகளையும், வரங்களையும் கர்த்தர் தருகிறார். கர்த்தர் கொடுத்த வாய்ப்புகளையும் காலங்களையும் பயன்படுத்துவதே ஒவ்வொருவருது கடமை. கர்த்தர் நம்மை தெரிந்து கொண்டதின் நோக்கம் நாம் கனி கொடுக்க வேண்டும், நமது கனி நிலைக்க வேண்டும். உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தாய் என்று கர்த்தர் எனக்குச் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் செயல்படுங்கள். தேவன் விளைச்சலை தருவார், ஆமென்.
No comments:
Post a Comment
"என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக" - சங்கீதம் 145:21